Tuesday, August 24, 2010

இன்றிரவு மிகச்சிறிய நிலாவை பார்க்கலாம்இன்றிரவு மிகச்சிறிய நிலாவை பார்க்கலாம்

    பூமிக்கும் நிலாவுக்கும் உள்ள சராசரி தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள்.
 
   நிலா தன் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் போது, சில மாதம் மட்டும் பூமியில் இருந்து சற்று தொலைவுக்கு சென்று விடும்.
 
    இந்த மாதம் பூமியில் இருந்து 2 லட்சத்து 52 ஆயி ரம் மைல் தொலைவுக்கு நிலா சென்று விட்டது. இதன் காரணமாக நிலா சற்று சிறியதாக தெரியும். இந்த ஆண்டின் மிகச்சிறிய பவுர்ணமி நிலவை இன்றிரவு வானில் பார்க்கலாம்.
 
    இந்த தொலை தூர சிறிய நிலாவுக்கு தானிய நிலவு என்று பெயர். இந்த தகவலை ஸ்பேஸ் அமைப்பின் தலைவர் சி.பி.தேவ்கன் தெரிவித்துள்ளார்.
 
   பூமிக்கும்- நிலாவுக்கும் இடையே தூரம் குறைவாக இருக்கும் போது நிலா நம் கண்களுக்கு சற்று பெரியதாக தெரியும். அந்த பெரிய நிலாவுடன் ஒப்பிடுகையில் இன்று நிலவு 15 சதவீதம் சிறியதாக தெரியும்.
 
   அது போல நிலாவின் ஒளி அடர்த்தியும் சுமார் 30 சதவீதம் குறைந்து விடும். இதனால் இன்றிரவு வழக்கமான நிலாவை விட சற்று ஒளி குறைந்த நிலா வையே நாம் காண முடியும்

No comments:

Post a Comment