இலங்கை முத்தரப்பு கிரிக்கெட்டில் இந்தியா இலங்கை இடையே நடந்த போட்டியில் ஷேவாக்கை சதம் அடிக்க விடாமல் இலங்கை வீரர்கள் திட்டமிட்டு தடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
அவர் 99 ரன்னில் இருந்த போது இலங்கை வீரர் ரன்தீவ் வேண்டும் என்றே நோபால் வீசி அவர் 100 ரன் எடுக்கவிடாமல் தடுத்தார்.
ரன்தீவ்தான் வேண்டும் என்றே இப்படி செய்ததாக கருதப்பட்டது. நடந்த சம்பவத்துக்கு ரன்தீவ் ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டார். இலங்கை கிரிக்கெட் வாரியமும் மன்னிப்பு கேட்டது.
ஆனால் இதன் பின்னால் பெரும் சதியே நடந்து இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. ரன்தீவ் தானாக நோபால் வீசவில்லை. அவரை கேப்டன் சங்ககரா தான் நோபால் வீச சொன்னார் என்பது அம்பலமாகி இருக்கிறது.
ஷேவாக் சதம் அடிப்பதை சங்ககரா விரும்பவில்லை. எனவே ஷேவாக் 90 ரன்களை தாண்டியதுமே அவர் சதம் அடிப்பதை தடுக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கினார்.
ஷேவாக் 95 ரன்னில் இருந்தபோது விக்கெட் கீப்ப ராக இருந்த சங்ககரா பந்தை வேண்டும் என்றே தடுக்காமல் பைஸ் விட்டார்.
ஷேவாக் 99 ரன்னில் இருந்தபோது ரன்தீவை நோபால் போட சொன்னார். அப்படி போட்டால் நோபால் மூலம் 1 ரன் கிடைத்து இந்தியா வெற்றி பெற்று விடும். அதே நேரத்தில் ஷேவாக்கையும் சதம் அடிக்க விடாமல் தடுத்து விடலாம் என்பது அவரது திட்டம்.
அவர் சொன்னபடி ரன்தீவும் நோபால் போட்டு ஷேவாக்கை சதம் அடிக்க விடாமல் தடுத்தார்.
சங்ககரா ரன்தீவிடம் நோபால் போட சொன்னது ஸ்டம்புக்கு கீழே உள்ள மைக்ரோ போன் மூலம் பதிவாகி உள்ளது. அவர் சிங்கள மொழியில் ரன்தீவிடம் சொல்லி இருக்கிறார். சிங்கள மொழி இந்திய வீரர்களுக்கோ அம்பயருக்கோ புரியாது என்பதால் அவர் கூறி இருக்கிறார். ஆனால் மைக்ரோ போன் மூலம் பதிவான டேப்பை ஆய்வு செய்தபோது அவர் சொன்ன தகவல் இடம் பெற்றுள்ளது.
அதேபோல இலங்கையில் மற்றொரு வீரர் திலகரத்னே தில்ஷானும் ரன்தீவிடம் சென்று நோபால் போடு என்று கூறி இருக்கிறார்.
ஆனால் நான் ரன்தீவிடம் நோபால் வீச சொல்ல வில்லை என்று சங்ககரா மறுத்து உள்ளார். நான் ரன்தீவிடம் ஷேவாக் ரன் எடுக்க விடாமல் தடுங்கள் என்றுதான் சொன்னேன். நோபால் வீசு என்று சொல்ல வில்லை. நடந்த உண்மைகள் நிச்சயம் உலகுக்கு தெரிய வரும் என்று அவர் கூறினார். இந்த விவகாரத்தில் அணியின் கேப்டன் என்ற முறையில் தான் பொறுப்பேற்பதாகவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று இலங்கை கேப்டன் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment